சமீபத்தில் "தோலால் செய்தவைகள் தான் வேண்டும் என அடம் பிடிப்பவரா நீங்கள்?" என்ற கேள்வியோடு தோல் ஆடைகள் ஆபரணங்கள் செய்ய என நடக்கும் கொடுமைகள் பற்றி நான் உங்களுடன் சில படங்களை மட்டும் பகிர்ந்து கொண்டேன். அதற்காக எனக்கு இமெயில் மூலம் கருத்து கூறியிருந்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
இதல்லாம் பார்க்கும் போது... நாமும் மாறிடலாமுனு நினைக்கிறேன்... ஆனா கொஞ்சம் யோசிச்சா? இதலாம் முடியாதுனு நினைக்கிறேன்.. என்று நடுவில் நின்று கொண்டு தவிப்பவர்களாகக் கூட இருக்கலாம் நீங்கள்... ஆனால் இதை பார்த்த பிறகு நீங்கள் கட்டாயம் ஒரு முடிவுக்கு வருவீர்கள் என நம்புகிறேன்.
நண்பர்களுடன் உரையாடும் பொழுதெல்லாம் நக்கலாக நாங்கள் சொல்லிக்கொள்வதுண்டு "இன்னைக்கு இருக்கிற நிலைமையில நல்ல விசயங்களை கூட கொஞ்சம் மசாலா தடவி... சுவாரசியம் ஏத்தி சொன்னாத்தான் நாளு பேரு பேருக்காகவாவது கேட்பான் என்று..." அது உண்மைதானோ என சந்தேகத்தை கிளப்பிவிட்டு செல்லும் பல செயல்கள் நாள்தோறும் நம் வாழ்விலேயே நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.
தேவைகளுக்காகத்தான் என சொல்லி சொல்லி... எத்தனையோ செய்தாகிவிட்டது...
இது உலகத்தின் நியதி என தத்துவம் பேசுபவர்களை கண்டால் எனக்கு இன்னும் பயம் அதிகரிக்கிறது...
ஆறாவது அறிவு இருக்கிறது என மெச்சி கொள்ளும் சமயத்தில்... அந்த அறிவு அழிவுக்குதானா? என நினைக்கும் போது உள்ளம் நடுங்குகிறது.
அமெரிக்காவில் விற்கப்படும் 50% மோலான "ஃப்ர் கார்மண்ட்ஸ்" [Fur Garments] சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அதற்காக பல தடிமனான ரோமத்துடன் கூடிய உயிரினங்கள் உயிருடன் தோலுரிக்கப்படுவதை "பீட்டா" [PETA] அமைப்பு வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது... இது குறித்து விளக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை....
இக்கொடுமையை தடுக்க நம்மால் ஆன உதவியை செய்வோம்...
பலரிடம் இச்செய்தியை கொண்டு சேர்ப்பதும்... தோலால் செய்யப்பட்டவைகளை தவிர்ப்பதும்... முடிந்தவரை உடன் இருப்பவர்களை குறைத்து கொள்ளும்படி வேண்டுவதும்... மனிதன் மட்டுமே வாழ்வதற்காக அல்ல இந்த வையகம் என்பதை உணர்ந்த வாழ்க்கை வாழ துவங்குவதும்... அவற்றிற்கு அடிகோலும் என நம்புகிறேன்....
இதோ.... அந்த கொடூரம்.... [மன வலிமை படைத்தவர்கள் மட்டும் பார்க்கவும்...]
Thursday, 14 May 2009
[நம்மை] உயிரோடு தோலுரித்தால்.... [மன பலமுள்ளவர்கள் மட்டும்]
Posted by
"கருவெளி"
Labels:
உயிரினம்,
சமூகம்,
சிந்திப்போமா?,
மறுமலர்ச்சி
Subscribe to:
Post Comments (Atom)
?/மனிதன் மட்டுமே வாழ்வதற்காக அல்ல இந்த வையகம் //
ReplyDeleteஇத புரிஞ்சிக்க தெரியாத நமக்கு எல்லாம் எதுக்கு ஆறாவது அறிவுன்னு தெரியல
இங்கனயும் பாருங்க http://paarvaigalpalavitham.blogspot.com/2009/04/blog-post_17.html
This comment has been removed by the author.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி...
ReplyDeleteஎல்லாம் புரிஞ்சு நடப்பது போல் நடிப்பதற்குதான் அந்த ஆறாவது அறிவை பயன்படுத்துகிறோம் என்றே நினைக்கிறேன்...
Its true, ஆறாவது அறிவு இருக்கிறது என மெச்சி கொள்ளும் சமயத்தில்... அந்த அறிவு அழிவுக்குதானா? yes...How to change this behaviour
ReplyDelete