Tuesday 12 May 2009

ஓட்டு போடலையோ! ஓட்டு!!

என்ன நடந்தாலும் பரவாயில்லை... ஓட்டு போட மறந்திடாதீங்க...




இத படிக்காதீங்க....(ஓட்டு போடுறதுனு முடிவு செஞ்சாலும் செய்யாட்டியும்...)

இந்த வருசமும் என் ஓட்டு போச்சு என்று புலம்பி கொண்டிருந்தவனையும் மிஞ்சும் அளவுக்கு புலம்பினான் இன்னொருவன்... உனக்கு பரவாயில்ல... ஓட்ட "சுவாஹா" பண்ணி உன்னை காப்பத்திட்டாங்க... எங்க நிலைமைய பாரு... நடக்குற கொடுமையெல்லாம் பார்த்துட்டு எந்த பொணந்திண்ணிக்கு ஓட்டு போடுறதுனு தெரியாம தவிச்சு கிட்டு இருக்கோம்.

இப்பத்தான் மொதமொத ஓட்டு போட வாய்ப்பு வந்திருக்கு... ஆனா இங்கே யாருக்கு ஓட்டு போட்டும் மக்களுக்கு பயனில்லை... ஓட்டு வாங்குறவ குடும்பத்து பிள்ளைகளுக்குதான் பயன் என்பது தெளிவா தெரிஞ்ச பிறகு ஓட்டு உரிமை மட்டும் எதுக்குனு தோணுது அண்ணே...

அந்த கொடுமைய விடுப்பா... அரை மணி நேரத்தில மூணு தடவ... தாங்க செஞ்சதா... தம்பட்டம் போடுற விளம்பரங்களின் கொடுமை தாங்கலப்பா... என்றபடி ஓடி வருகிறார் வீட்டில் டி.வி. பெட்டியை பார்த்து கொண்டிருந்தவர்.

ஓசியில... டி.வி வாங்குறப்ப யோசிக்கனும்... இப்ப புலம்பி என்ன செய்ய... அண்ணே... எங்க வீட்டுல இருக்கிறது... நான் சம்பாதித்து வாங்கினதுதானே,,,, ஆனா இருக்கிற சேனலெல்லாம் அவங்கது தம்பி... அத மறந்திடாதே!

49-ஓ வை இந்த வருசமாவது ஓட்டு இயந்திரத்திலேயே கொண்டு வந்திருவாங்கனு கனவு கண்டேன்... ஆனா அதுவும் கனவாவே போச்சு... - இது படிச்சுட்டு ஓட்டு போட பயந்திட்டிருந்து... 49-ஓ வை பற்றி கேள்விபட்ட கூட்டத்தின் பிரதிநிதி..

49-ஓ வா? அப்படினா? - இது 99% வாக்குரிமை (மட்டும்) உள்ள குடிமக்கள்....

மொதல்ல ஓட்டுரிமை எதுக்குனு சொல்லுங்க? - வெறுத்து போன பெரிசு...


இந்த குடிமக்களோட புலம்பல் தாங்கமுடியலப்பா....
குடிச்சமா! பிரியாணிய முழுங்கினமா...
சொன்ன படத்து பட்டனை அமுக்கினோமா...
வந்து அடுத்த அஞ்சு வருசத்துக்கு புலம்பினமா...
அடுத்த தடவ இன்னொருத்தனுக்கு பட்டனை அமுக்கினோமானு இல்லாம...
இப்ப எண்ண புதுசா... ஏதேதோ... யோசிச்சுகிட்டு....
போங்கையா.... போயி... ஓட்ட போடுங்க....


2 comments:

நீங்க சொல்ல நினைக்கிறத உங்கள தவிர வேற யாரும் சொல்ல முடியாது... இப்ப சொல்ல நினைக்கிறத இப்பவே சொல்லிடுங்க... இல்லனா அப்புறமா நமக்கே மறந்து போயிடும்...