Monday 25 May 2009

வணக்கம்...



MAY BE AVAILABLE AT

http://oliyinpayanam.wordpress.com

Friday 22 May 2009

இது பிளேன் கேட் (அட! இரயில்வே கேட் மாதிரி...)

நம்ம ஊருல..... இரயில்வே கேட்ட பார்த்திருக்கோம்...
இரயில் போகும் வரை காத்திருக்கும் வாகனங்களை பார்த்திருக்கோம்...

ஆனா... இந்த உலகத்தில ஒரு இடத்தில (Gibraltar) பிளேன் வருதுனு
கேட்டு போட்டு இருக்காங்க....
பிளேன் போகட்டும் என்று வாகனங்களும் காத்து கிடக்கு....

எப்படித்தான் இப்படி இடத்தில டிராபிக்க மேனேஜ் செய்கிறார்களோ?
நினைச்சாலே கண்ணக்கட்டுது...

நீங்க கண்ணால பாருங்க... உங்களுக்கும் கண்ண கட்டும்....






Thursday 21 May 2009

9 மில்லியன் தங்கத்தேர் (கார்)!!

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ! (திறந்த வாய கொஞ்சம் மூடுங்க!)


நம்ம ஊர்ல தங்கத்தேர் விடுவோம்... இவங்க தங்க காரே விடுறாங்க...


தங்கத்தோட விலை ஏ கூடுதுனு இப்ப தெரியுதா?

பொருளாதார சரிவு எல்லாம் கீழ் தட்டு மக்களுக்குதான்...
(இந்த காரை எந்த கீழ் தட்டு குடிமகனும் வாங்க மாட்டானு நினைக்கிறேன்)

சரி கொஞ்சம் தண்ணீய ஊத்தி எரிகிற நெருப்ப அணைங்க...













===========================================================
Thanks : fropki.com

Sunday 17 May 2009

அலை... அலையாய்...-2

அலைகளை கண்டு
இரசித்ததுண்டு...
அஞ்சியதுண்டு...
அதிசயித்ததுண்டு...
பிரமித்ததுண்டு...
மனதுக்கு உவமையாக்கியதுண்டு...
அழித்த போது அழுததுண்டு...
அவமரியாதை செய்ததுண்டு...
எத்தனை செய்தாலும்...
இன்னொருமுறை
பார்க்கும் போது...
மனதை அலைபாய
செய்ய தவறியதில்லை...
இந்த அலைகள்!


அலைகளை படம் பிடிப்பதையே தனது வாழ்வின் இலட்சியமாய் கொண்டிருக்கும் "கிளர்க் லிட்டில்" அவர்களின் புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள மனம் அலை பாய்ந்ததால்தான் இங்கு இதனை கிறுக்கி கொண்டிருக்கிறேன்...

சரி... நீங்களும் உங்கள் மனதை அலை பாய விடுங்கள்....






அலை... அலையாய்... -1

அலைகளை கண்டு
இரசித்ததுண்டு...
அஞ்சியதுண்டு...
அதிசயித்ததுண்டு...
பிரமித்ததுண்டு...
மனதுக்கு உவமையாக்கியதுண்டு...
அழித்த போது அழுததுண்டு...
அவமரியாதை செய்ததுண்டு...
எத்தனை செய்தாலும்...
இன்னொருமுறை
பார்க்கும் போது...
மனதை அலைபாய
செய்ய தவறியதில்லை...
இந்த அலைகள்!


அலைகளை படம் பிடிப்பதையே தனது வாழ்வின் இலட்சியமாய் கொண்டிருக்கும் "கிளர்க் லிட்டில்" அவர்களின் புகைப்படங்களை
உங்களுடன் பகிர்ந்து கொள்ள மனம் அலை பாய்ந்ததால்தான் இங்கு இதனை கிறுக்கி கொண்டிருக்கிறேன்...

சரி... நீங்களும் உங்கள் மனதை அலை பாய விடுங்கள்....






Thursday 14 May 2009

[நம்மை] உயிரோடு தோலுரித்தால்.... [மன பலமுள்ளவர்கள் மட்டும்]

சமீபத்தில் "தோலால் செய்தவைகள் தான் வேண்டும் என அடம் பிடிப்பவரா நீங்கள்?" என்ற கேள்வியோடு தோல் ஆடைகள் ஆபரணங்கள் செய்ய என நடக்கும் கொடுமைகள் பற்றி நான் உங்களுடன் சில படங்களை மட்டும் பகிர்ந்து கொண்டேன். அதற்காக எனக்கு இமெயில் மூலம் கருத்து கூறியிருந்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

இதல்லாம் பார்க்கும் போது... நாமும் மாறிடலாமுனு நினைக்கிறேன்... ஆனா கொஞ்சம் யோசிச்சா? இதலாம் முடியாதுனு நினைக்கிறேன்.. என்று நடுவில் நின்று கொண்டு தவிப்பவர்களாகக் கூட இருக்கலாம் நீங்கள்... ஆனால் இதை பார்த்த பிறகு நீங்கள் கட்டாயம் ஒரு முடிவுக்கு வருவீர்கள் என நம்புகிறேன்.

நண்பர்களுடன் உரையாடும் பொழுதெல்லாம் நக்கலாக நாங்கள் சொல்லிக்கொள்வதுண்டு "இன்னைக்கு இருக்கிற நிலைமையில நல்ல விசயங்களை கூட கொஞ்சம் மசாலா தடவி... சுவாரசியம் ஏத்தி சொன்னாத்தான் நாளு பேரு பேருக்காகவாவது கேட்பான் என்று..." அது உண்மைதானோ என சந்தேகத்தை கிளப்பிவிட்டு செல்லும் பல செயல்கள் நாள்தோறும் நம் வாழ்விலேயே நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.

தேவைகளுக்காகத்தான் என சொல்லி சொல்லி... எத்தனையோ செய்தாகிவிட்டது...
இது உலகத்தின் நியதி என தத்துவம் பேசுபவர்களை கண்டால் எனக்கு இன்னும் பயம் அதிகரிக்கிறது...
ஆறாவது அறிவு இருக்கிறது என மெச்சி கொள்ளும் சமயத்தில்... அந்த அறிவு அழிவுக்குதானா? என நினைக்கும் போது உள்ளம் நடுங்குகிறது.

அமெரிக்காவில் விற்கப்படும் 50% மோலான "ஃப்ர் கார்மண்ட்ஸ்" [Fur Garments] சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அதற்காக பல தடிமனான ரோமத்துடன் கூடிய உயிரினங்கள் உயிருடன் தோலுரிக்கப்படுவதை "பீட்டா" [PETA] அமைப்பு வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது... இது குறித்து விளக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை....

இக்கொடுமையை தடுக்க நம்மால் ஆன உதவியை செய்வோம்...

பலரிடம் இச்செய்தியை கொண்டு சேர்ப்பதும்... தோலால் செய்யப்பட்டவைகளை தவிர்ப்பதும்... முடிந்தவரை உடன் இருப்பவர்களை குறைத்து கொள்ளும்படி வேண்டுவதும்... மனிதன் மட்டுமே வாழ்வதற்காக அல்ல இந்த வையகம் என்பதை உணர்ந்த வாழ்க்கை வாழ துவங்குவதும்... அவற்றிற்கு அடிகோலும் என நம்புகிறேன்....

இதோ.... அந்த கொடூரம்.... [மன வலிமை படைத்தவர்கள் மட்டும் பார்க்கவும்...]



Pledge to go fur-free at PETA.org.


இதற்கு ஏதேனும் செய்தே ஆக வேண்டுமென துடிக்கிறீர்களா?

கீழ்காணும் செய்தியை கொண்டு இமெயில் மூலம் உங்களுக்கு தெரிந்த நண்பர்களிடம் கையொப்பங்களை சேகரியுங்கள், 500 கையொப்பங்கள் வந்ததும்.... PETA2@peta.org என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்...

Please sign, don't watch video its just too painful but we have to try and stop this brutality. It's about animal rights. But if you must watch there is a link below.

I explain the process below:
With a hidden camera, animals were filmed being
SKINNED ALIVE!!! They say it's done to get a more
perfect ''cut''.afterwards the carcasses
are tossed into a pile, still alive, and
for up to 10 minutes you can see their hearts still
beating, in agony, their eyes still blinking, and the puppies little
paws still shaking.
There was one pup, that still lifted his head and
gazed at the camera with bloodied eyes . If
you don't care to see the video, please sign and
forward to your friends:
this monstrosity has to be stopped, we have to act!!
Please scroll down and add your signature to the petition and send to
everyone in your address book. Do not click on the link, you have been warned
that it is too gruesome to watch and something needs to done to stop it...
Thanks for your support

There is no need to see the video, but if you must, be aware,
it's horrible. The following video is of excruciating violence. It's
painful silence affects us all deeply. If we don't protect animals from
this type of brutality, we become accomplices
http://www.peta.org/feat/ChineseFurFarms/index.asp



When the list reaches 500 names, please forward to:
PETA2@peta.org
Thank you .

பீட்டா மற்றும் இச்செய்திகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள.... [To Read In English...]

http://www.peta.org/feat/ChineseFurFarms/index.asp


நன்றிகளுடன்
கருவெளி ராச.மகேந்திரன்

Tuesday 12 May 2009

ஓட்டு போடலையோ! ஓட்டு!!

என்ன நடந்தாலும் பரவாயில்லை... ஓட்டு போட மறந்திடாதீங்க...




இத படிக்காதீங்க....(ஓட்டு போடுறதுனு முடிவு செஞ்சாலும் செய்யாட்டியும்...)

இந்த வருசமும் என் ஓட்டு போச்சு என்று புலம்பி கொண்டிருந்தவனையும் மிஞ்சும் அளவுக்கு புலம்பினான் இன்னொருவன்... உனக்கு பரவாயில்ல... ஓட்ட "சுவாஹா" பண்ணி உன்னை காப்பத்திட்டாங்க... எங்க நிலைமைய பாரு... நடக்குற கொடுமையெல்லாம் பார்த்துட்டு எந்த பொணந்திண்ணிக்கு ஓட்டு போடுறதுனு தெரியாம தவிச்சு கிட்டு இருக்கோம்.

இப்பத்தான் மொதமொத ஓட்டு போட வாய்ப்பு வந்திருக்கு... ஆனா இங்கே யாருக்கு ஓட்டு போட்டும் மக்களுக்கு பயனில்லை... ஓட்டு வாங்குறவ குடும்பத்து பிள்ளைகளுக்குதான் பயன் என்பது தெளிவா தெரிஞ்ச பிறகு ஓட்டு உரிமை மட்டும் எதுக்குனு தோணுது அண்ணே...

அந்த கொடுமைய விடுப்பா... அரை மணி நேரத்தில மூணு தடவ... தாங்க செஞ்சதா... தம்பட்டம் போடுற விளம்பரங்களின் கொடுமை தாங்கலப்பா... என்றபடி ஓடி வருகிறார் வீட்டில் டி.வி. பெட்டியை பார்த்து கொண்டிருந்தவர்.

ஓசியில... டி.வி வாங்குறப்ப யோசிக்கனும்... இப்ப புலம்பி என்ன செய்ய... அண்ணே... எங்க வீட்டுல இருக்கிறது... நான் சம்பாதித்து வாங்கினதுதானே,,,, ஆனா இருக்கிற சேனலெல்லாம் அவங்கது தம்பி... அத மறந்திடாதே!

49-ஓ வை இந்த வருசமாவது ஓட்டு இயந்திரத்திலேயே கொண்டு வந்திருவாங்கனு கனவு கண்டேன்... ஆனா அதுவும் கனவாவே போச்சு... - இது படிச்சுட்டு ஓட்டு போட பயந்திட்டிருந்து... 49-ஓ வை பற்றி கேள்விபட்ட கூட்டத்தின் பிரதிநிதி..

49-ஓ வா? அப்படினா? - இது 99% வாக்குரிமை (மட்டும்) உள்ள குடிமக்கள்....

மொதல்ல ஓட்டுரிமை எதுக்குனு சொல்லுங்க? - வெறுத்து போன பெரிசு...


இந்த குடிமக்களோட புலம்பல் தாங்கமுடியலப்பா....
குடிச்சமா! பிரியாணிய முழுங்கினமா...
சொன்ன படத்து பட்டனை அமுக்கினோமா...
வந்து அடுத்த அஞ்சு வருசத்துக்கு புலம்பினமா...
அடுத்த தடவ இன்னொருத்தனுக்கு பட்டனை அமுக்கினோமானு இல்லாம...
இப்ப எண்ண புதுசா... ஏதேதோ... யோசிச்சுகிட்டு....
போங்கையா.... போயி... ஓட்ட போடுங்க....