Sunday 8 March 2009

நம் தலைவர் யார்? [சே பிடலுக்கு..... மடலுடன்]

இம்மடல் கடைசி நிமிடங்களில் பிடலுக்காக சே... எழுதியது போல் கருவெளியில் நான் எழுதியதுதான் என்றாலும் ஒளியின் பயணத்திற்கு இது இக்கணம் வருவதற்க்கு காரணம்... இதோ இம்மடலைத்தொடர்ந்து இணைத்துள்ள சேவின் இறுதி நிமிடப்படம் தான்... தோழர் ஒருவரின் மூலமாக கிட்டியது... மறுநொடி... இந்த யோசனையும் தோன்றியது...

நாம் சிறிது எதிர்பாராத விசயங்கள்... எப்படியோ இன்னொரு நிகழ்வுக்கு காரணமாகி போய்விடுகின்றன... இன்றைய இப்பதிவும் அத்தகையதே...


இம்மடல் பிறந்த கதையும் அவ்வாறானதே.... அந்த மாலை வேளையிலே... சில பென்சில்களும் அட்டையும் வாங்க சென்ற நான் தவறிப்போய் புத்தகக் கடையினுள் நுழைய கையில் சிக்கியது... சே மற்றும் பிடலின் வாழ்க்கை வரலாறு... எடுத்து படிக்க ஆரம்பித்தவன் அடுத்த நாள் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் மீதத்தை நாளை படிக்கலாம் என வைத்தேன்... மறுநாள் முடித்த மறுநொடியே பிறந்ததுதான் இம்மடல்... இதில் மிக முக்கியமான விசயம் என்னவென்றால்... அதற்கு முன் பிடலின் பெயரை மட்டுமே கேட்டிருக்கிறேன்... நேதாஜிக்கு பின் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்திய ஒரு மனிதர் சேதான்... (அவரின் உருவம் பதித்த t-shirt உடன் சுத்தும் அளவிற்கு...)








தலைவர்கள் - மக்கள் - மாநிலம்
===============================

தலைவர்கள் மக்களுக்காக
தங்கள் வாழ்வை
துச்சமென நினைத்து
எக்கணமும் களத்தில் இருப்பர்...

மக்களோ...
தங்களின் தலைவர்களை காக்க
உயிரையும் காற்றில் கலந்திட துடித்திருப்பர்"

அம்மாநிலமோ...
எல்லா வளமுடன்
சமமான வாழ்வை
எல்லோருக்கும் வழங்கியிருக்கும்...

என்று கிட்டும் இம்மாநிலத்திற்கு அத்தகைய ஒரு நிலை....?

எனது இந்த கருவெளி தேடல்கள்... உங்களுக்காக...


Saturday 7 March 2009

இன்றைய இளைஞர்களிடம் இல்லாமல் போனது...

இன்றைய இளைஞர்களிடம் இல்லாமல் போனதா?
இல்லை அத்தகைய குணத்தை முந்தைய தலைமுறை நமக்கு சொல்லி கொடுக்க மறந்து போனதோ? அல்லது

நமக்கு என்று எதுவும் ஒரு பெரிய குறிக்கோள் இல்லாமல் போனதா? - அல்லது

எனக்கு நடக்கட்டும்.. அப்போது நான் பார்த்து கொள்கிறேன் என்ற மெத்தன போக்கா? - அல்லது

இது எனது கவலை இல்லை என்ற தட்டி கழிக்கும் குணமா? - அல்லது

நல்ல தலைவர்களைத் தேடி தேடி... தனக்குள் இருக்கும் நல்ல தலைவர்களை கண்டு கொள்ளாமலே வாழும் நிலையா?

எது? எது? நமது இளைஞர்களை நாட்டின் முன்னேற்றத்திற்கு முன்னின்று உழைக்கும் குணத்தை இல்லாமல் செய்தது எது? எது? என கேள்விகளை எனக்குள் எழச்செய்தது இலங்கையில் அமைதி திரும்ப நடைபெற்ற அமைதி நடைபயணத்தில் கலந்து கொண்ட இவரை கிளிக்கிய போது....



Thursday 5 March 2009

வார்த்தைகளில்லை... என்னிடம்...

சமீபத்தில் சென்னையில் நடந்த அமைதி நடைபயணத்தின் போது... பெயரும் கேட்காமல்... அவர் சம்மதத்துடன் எடுத்த படம்..

தமிழன் உணர்வற்று கிடக்கிறான் தமிழீழ விசயத்தில் என்று எவரும் கூற இயலாது... இந்த நடைபயணத்தில் கலந்து கொண்ட இவர் போன்ற இளைஞர்களை பார்த்த பின்னே..

இப்போது உடனடி தேவை என்ன? என்பது... அவரும்... நாம் அனைவரும் அறிந்ததே... இருந்தும் மயான அமைதி மட்டும் தொடருது...

மேலும் நான் கூற ஒன்றுமில்லை...
நீங்கள் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள இங்கு எப்பொழுதும் இடம் உண்டு...


Wednesday 4 March 2009

முதல் முறையாதலால்... பெயரறியேன்..

ஒளியின் பயணத்தில் இப்படைப்பு முதலாவதாய் அமையுமென நான் இந்நொடிவரை நினைக்கவில்லை என்றாலும்.. அது நிகழ்கிறது...

ஒளியால் நான் கண்டவை...
ஒளியால் என் எண்ணங்களில் உருவானவையோடு இணையும் போது...
என்னவாகும்... அதைத்தான்
இங்கு இனி நீங்கள் காணப் போகிறீர்கள்...
என்னோடு...
இந்த ஒளியின் பயணத்தில்...


இதோ...
இந்த முதல் படைப்பிற்கு காரணம் யாரென்று கேட்டால்... நான் என்ன சொல்ல... அதோ...
அந்த எழுத்துக்களை தாங்கி நிற்கும் அந்த படம்தான்.. அதில் தனித்திருக்கும் இதயம் தான்... அங்கு பரவும் ஒளி வெள்ளம்தான்...

என்னோடு நீங்களும் இரசிக்கவே...
கவிதை வரிகளை... அங்கேயே விட்டுவிட்டேன்... இது இப்போது எனது desktop background... என் நண்பர்களுக்கு... ..... அதை சொல்லக்கூடாது...

உங்களுக்கு....?