Thursday 9 April 2009

போர்கள் எதற்கு?

சமீபத்தில் சில படங்களை பார்த்து கொண்டிருக்கும் பொழுது.. தற்செயலாய் கண்ணில் பட்ட இந்த படங்கள் என்னிடம் ஒரு கேள்வியை எழுப்பியது... அது போர்கள் எதற்கு? என்பதே...













பலவாறு முயன்றும் பதில்கள் கிட்டவில்லை... திடீரென போன வருடம் ராஜஸ்தான் குண்டுவெடிப்பின் போது எழுதிய உணர்வுகள் மனதில் தோன்றவே... அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பி... ஒளியின் பயணத்திற்கு விரைந்தேன்... விளைவு... உங்கள் கண் முன்னே... "போர்கள் எதற்கு?"

இதோ.... "அணுவைப் பிளந்து" என்ற தலைப்பில் நான் கொட்டிய உணர்வுகள்...

அணுவைப்பிளந்து...

எத்தனை பெயர் வேண்டுமானாலும்
வைத்து அழைத்து கொள்ளுங்கள்...


சுதந்திரப்போர்,
உரிமை மீட்பு,
அடிமை ஒழிப்பு,
அடக்குமுறை எதிர்ப்பு,
மண் மீட்பு,
விடுதலைப்போர்,
இறையின் ஆணை,
மண்ணின் மக்களுக்கே,
இன்னும் எதுவாகினும் சரி....
அணு அணுவாய் உடல்களை சிதைத்து,
சாம்பலையும் காற்றில் கரைத்து,
பல உயிர்களை குடித்து..
யார் வாழ்வதற்காக இப்பூமியை தயார் செய்கிறீர்கள்...
என் தோழர்களே?!

நீ இழந்ததாய் நினைக்கும் அனைத்தையும்
அனைவரும் இழந்த பின்புதான்...
நீ ஓய்வாயோ?! சொல்!

அணுவை துளைத்து பெரும் சக்தி கண்டு
நமக்காய் தந்தவரும், அவமானத்தால்
மறுபடியும் மறுபடியும் சாகும் சாபமாய்...
வாழ்கிறாயே உன் வாழ்வை!

பல உயிர்களை குடித்து
யார் வாழ்வதற்காக இப்பூமியை தயார் செய்கிறீர்கள்...
என் தோழர்களே?!


இதை pdf format- ல் நீங்கள் இங்கு மின்னிறக்கம் செய்து கொள்ளலாம்...




யாரும் மிஞ்சிடாத... மீண்டும் உருவாக்கப்பட வேண்டிய பேரழிவுக்குள்ளான மனித வளத்தையும், இயற்கை வளத்தையும் மட்டும் எச்சமாக விட்டு செல்லும் போர் எதற்கு?
இனியாவது சிந்திப்போமா?

3 comments:

  1. :).. வாழ்க்கை வாழ்வதற்கே! அதற்காக மற்றவர் சப்பாத்துக் கால்களால் ஏறி மிதித்துக் கொண்டிருக்க, அச்சப்பாத்துகளை நக்கி வாழ்வது வாழ்வாகாது. அடிமைப் பட்டேனும் உயிரைப் பிடித்துக் கொண்டிருப்பதற்குப் பெயர் வாழ்க்கை அல்ல. உலகம் அழகாய் இருக்க வேண்டுமென்பதில் மனிதம் உள்ளவர்களுக்கு ஆட்சேபனை இருக்க முடியாது, அதே சமயம் உலக அழகு கெட்டு விடுமே என்று மனித உரிமைக்கு குரல் கொடுக்காது இருக்க முடியாது. தலைவலியும்.. காய்ச்சலும்.. போல அவரவர் அனுபவித்தால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும் போராட்டத்தின் நிர்ப்பந்தந்தை. இதை அனுபவிக்காதவரிடம், "ரொட்டித் துண்டுக்கு வழியில்லை" என்று முறையிட்ட குடி மக்களிடம்.. "அதற்கென்ன, கேக் சாப்பிடலாமே" என்று கேட்ட ராணியின் மனநிலைதான் இருக்க முடியும்!
    ஆமாம்.. இனியாவது சிந்திப்போமா.. நம் குறுகிய வட்டத்தையும், அதன் கனவில் மட்டுமே சாத்தியமான விடயங்களையும் விடுத்து.. நிதர்சனத்தில் நடப்பவை பற்றி.. உரிமைக்காக குரல் கொடுப்பவர்களை நோகாது, உரிமையை நசுக்குபவர்களைக் கண்டிக்கும் துணிவு பெறுவது பற்றி..!

    ReplyDelete
  2. தங்களின் க்ருத்தை படிக்க படிக்க எனக்குள்ளும் ஒரு வேகம் பிறக்கத்தான் செய்கிறது... பாரதியிடம் உங்களைப் போல் இல்லாவிட்டாலும் சிறிது நானும் ரெள்த்திரம் பற்றி பழகி கொண்டுதான் இருக்கிறேன்.
    \ஆமாம்.. இனியாவது சிந்திப்போமா.. நம் குறுகிய வட்டத்தையும், அதன் கனவில் மட்டுமே சாத்தியமான விடயங்களையும் விடுத்து.. நிதர்சனத்தில் நடப்பவை பற்றி.. உரிமைக்காக குரல் கொடுப்பவர்களை நோகாது, உரிமையை நசுக்குபவர்களைக் கண்டிக்கும் துணிவு பெறுவது பற்றி..!\
    கண்டிப்பாய்... அதற்கான எல்லா துணிவும் உண்டு.. இந்த குறிப்பிட்ட படைப்பு... அமைதி வேண்டி துடிக்கும் ஒரு மகேந்திரனின் புலம்பல்...

    உங்களுக்காக
    http://karuveli.blogspot.com/2009/01/blog-post_13.html

    http://karuveli.blogspot.com/2009/02/blog-post_10.html

    எனது விருப்பம் எல்லோருக்குமான அமைதியான வையகம்...
    அது வையகத்தை இழந்த பின்பு எப்படி கிட்டும்?

    சிந்திக்கிறேன்...
    யுத்தத்திற்கென... பூமியை விட்டு தூரத்தில் ஒரு களத்தை கண்டுபிடித்து கொடுக்க...
    முடியுமா?

    மனிதர் நோக மனிதர் பார்க்கும்
    வாழ்க்கை இனியுண்டோ?

    http://negalkalam.blogspot.com/2009/02/2.html

    ReplyDelete
  3. very nice
    very wonder full your writing

    ReplyDelete

நீங்க சொல்ல நினைக்கிறத உங்கள தவிர வேற யாரும் சொல்ல முடியாது... இப்ப சொல்ல நினைக்கிறத இப்பவே சொல்லிடுங்க... இல்லனா அப்புறமா நமக்கே மறந்து போயிடும்...