Tuesday, 7 April 2009

இத பத்து பேருக்கு அனுப்பினால்...

"மகாலெட்சுமி... உங்களுக்கு நற்செய்தியை கொண்டு வருவார்."



இதனை பத்து பேருக்கு அனுப்பினால்... 48 மணி நேரத்திற்குள் உங்களுக்கு ஒரு நற்செய்தி கிட்டும் என்ற செய்தியுடன் வந்த இமெயில் இணைத்திருந்த புகைப்படம் இது. நல்லவேளை மற்ற இமெயில்களில் வருவது போல் அனுப்பாவிட்டால் "......."க்கு நடந்தது போல் உங்களுக்கும் தொடர் துன்பங்கள் வந்து சேரும் என்ற மிரட்டல்கள் இல்லை... ஆகையால் எந்தவித குழப்பமுமின்றி... அனுப்பியவருக்கே பத்து முறை அனுப்பி வைத்து விட்டேன்.

இது போல் சில நாட்களுக்கு முன் வந்த "ஏசு உனக்காகத்தான் உதிரம் சிந்தினார்" "உனக்காகத்தான் உயிர் நீத்தார்" என்ற செய்தியுடன் வந்த ஏசுவின் (உருவங்களின்) புகைப்படத்தொகுப்பும் என்னை மிகவும் அமைதியற்ற நிலைக்கு தள்ளி விட்டன.



முன்பெல்லாம் திருப்பதி,ஏழுமலையான்,மும்பை விநாயகர்,லெட்சுமி... வரிசையில் இப்பொழுது ஏசுவையும் சேர்த்து விட்டார்கள்.


இது போன்ற இமெயில்களின் நோக்கம் தான் என்ன? என்ற கேள்வி எனக்குள் எழுந்து கொண்டே இருந்தது... விடை கிட்டியபாடில்லை.... ஆனால் மேலும் பல கேள்விகள் எழுந்தன...

மதத்தை பரப்பும் ஒரு யுக்தியாக இருக்குமோ?

தெய்வத்திற்கும் விளம்பரம் தேவையோ?

ஒருவர் பயந்து பார்வேர்ட் செய்வதால் பரவுகிறதோ?

ஊடகங்களை எப்படியெல்லாம் பயன்படுத்தலாமுனு யோசிப்பாங்கலோ?

இப்படி கேள்விகள்... அடுக்கடுக்காய் பெருகி கொண்டே போயின... இது போன்றவைகளுக்கு என்ன காரணம் இருக்க முடியும்... அதிகமான நபர்களை இச்செய்தி சென்றடைய வேண்டும் என்பதை தவிர...

இன்றைய விளம்பர உலகில் இது போன்றவைகள் நிகழ்வது தவிர்க்க முடியாதது என்பதை நான் மறுப்பதற்கில்லை... ஆனால் இத்தகைய மிரட்டல்களால் எத்தனை காலம் ஒரு மதமும், தெய்வமும், ஒரு விசயமும் ஒருவரிடம் இருக்க முடியும்.. நல்லவிதமான் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும்.

அருமையான இயற்கை காட்சியை எனது நட்பு வட்டாரத்திற்கு அனுப்ப எப்போதும் விரும்பும் நான், இது போன்ற இமெயில்களை என்னுடனே நிறுத்தி கொள்வதுண்டு. அப்படியே அனுப்புவதென்றாலும் யார் யார் இத்தகைய விசயங்களில் விருப்பம் உள்ளவர்களே அவர்களுக்கு மட்டுமே (மிரட்டல்களை எல்லாம் எடிட் செய்துவிட்டு) அனுப்பி வைத்து மகிழ்வேன்.


இனியும் தவறான விளம்பரங்களுக்கு பலியாக வேண்டாம். சரியான செய்தியை என்றாலும் தவறான் நபரிடம் கொண்டு சேர்த்தால் தவறாகிப்போகும். அட! இமெயில் பார்வர்ட் செய்வது எவ்வளவு முக்கியமோ? அவ்வளவு முக்கியம் எந்த விசயத்தை, யாருக்கு அனுப்புகிறோம் என்பது....


-------------------------------------------------------------------

விளம்பரங்களின் தாக்கம் பற்றி நான் உங்களுக்கு கூறத்தேவையில்லை... விளம்பரத்திற்கிடையில் படம் / நிகழ்ச்சிகளை டி.வியில் பார்த்து முடிக்கும் நமக்கில்லாத அனுபவமா? என்கிறீர்களா?

"நாளை என் படமே எனக்கு அனுப்பி வைக்கப்படலாம்...."

குறிப்பு :
இந்நிகழ்வு நிகழ காரணமாய் இருந்த இரு தோழர்களின் இமெயிலுக்கும் நன்றி...

4 comments:

  1. இது போன்றவை மெயல்களாக மட்டுமல்லாது sms கலாகவும் வந்து தொல்லை தருகின்றன... ஒரு நாளைக்கு குறைந்தது 2 sms இது போன்று வருகிறது...

    ReplyDelete
  2. நான் இதுமாதிரி வரும் மின் அஞ்சல்களை யாருக்கும் அனுப்புவது கிடையாது. இதுவும் ஒரு வகை spam தான்.

    ReplyDelete
  3. செல்வராஜ்
    தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி...

    செல்வராஜ் - நீங்கள் சரியான முடிவைத்தான் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். நண்பர்களுக்கு மெயில் அனுப்பாவிட்டாலும் பரவாயில்லை... இப்படி தொந்தரவு கொடுக்காமல் இருப்பது உத்தமம். என் வாழ்த்துக்கள்.

    தொடரட்டும் ஒளியுடன் உங்கள் பயணம்.

    ReplyDelete
  4. வெங்கடேஷ்...
    தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி... நீங்கள் சொல்வது சரிதான் sms தொல்லைகளை ஒழிக்க teri-லிருந்து சில கடுமையான விதிமுறைகளை கொண்டு வந்துள்ளனர். அதன் பயனாகத்தான் "Don't disturb" (அ) தொந்தரவு செய்யவேண்டாம் என்ற option-ஜ பல நிறுவனங்கள் அமல் படுத்தி உள்ளன... இந்த அனுபவங்களை பற்றி விரைவில் நிகழ்களத்தில் எழுத உள்ளேன்...

    தொடரட்டும் ஒளியுடன் உங்கள் பயணம்.

    ReplyDelete

நீங்க சொல்ல நினைக்கிறத உங்கள தவிர வேற யாரும் சொல்ல முடியாது... இப்ப சொல்ல நினைக்கிறத இப்பவே சொல்லிடுங்க... இல்லனா அப்புறமா நமக்கே மறந்து போயிடும்...