நாம் சிறிது எதிர்பாராத விசயங்கள்... எப்படியோ இன்னொரு நிகழ்வுக்கு காரணமாகி போய்விடுகின்றன... இன்றைய இப்பதிவும் அத்தகையதே...
இம்மடல் பிறந்த கதையும் அவ்வாறானதே.... அந்த மாலை வேளையிலே... சில பென்சில்களும் அட்டையும் வாங்க சென்ற நான் தவறிப்போய் புத்தகக் கடையினுள் நுழைய கையில் சிக்கியது... சே மற்றும் பிடலின் வாழ்க்கை வரலாறு... எடுத்து படிக்க ஆரம்பித்தவன் அடுத்த நாள் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் மீதத்தை நாளை படிக்கலாம் என வைத்தேன்... மறுநாள் முடித்த மறுநொடியே பிறந்ததுதான் இம்மடல்... இதில் மிக முக்கியமான விசயம் என்னவென்றால்... அதற்கு முன் பிடலின் பெயரை மட்டுமே கேட்டிருக்கிறேன்... நேதாஜிக்கு பின் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்திய ஒரு மனிதர் சேதான்... (அவரின் உருவம் பதித்த t-shirt உடன் சுத்தும் அளவிற்கு...)


தலைவர்கள் - மக்கள் - மாநிலம்
===============================
தலைவர்கள் மக்களுக்காக
தங்கள் வாழ்வை
துச்சமென நினைத்து
எக்கணமும் களத்தில் இருப்பர்...
மக்களோ...
தங்களின் தலைவர்களை காக்க
உயிரையும் காற்றில் கலந்திட துடித்திருப்பர்"
அம்மாநிலமோ...
எல்லா வளமுடன்
சமமான வாழ்வை
எல்லோருக்கும் வழங்கியிருக்கும்...
என்று கிட்டும் இம்மாநிலத்திற்கு அத்தகைய ஒரு நிலை....?
எனது இந்த கருவெளி தேடல்கள்... உங்களுக்காக...
